×

யுஜிசியின் புதிய வரைவு அறிக்கையை திரும்பபெறக்கோரி அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

 

மன்னார்குடி, பிப். 8: தமிழக மாணவர்களின் உயர்கல்வி உரிமைகளை பறிப்பதற்கு யுஜிசி ஒன்றிய அரசுடன் இணைந்து 2025 புதிய வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக் கழகங் களை அபகரிக்க முயற்சிக்கிறது. உயர்கல்வியில் அதிகம் படித்த மாணவர்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனை பொறுத்து கொள்ள முடியாத ஒன்றிய அரசு தற்போது நடைமுறையில் உள்ளதை மாற்றி புதிய வரைவு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் யுஜிசியின் புதிய வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன் னெழுச்சியுடன் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் ஒருப்பகுதியாக, யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறு த்தி மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரி வாயிலில் அனைத்திந் திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளை தலைவர் சுமன் தலைமை வகித்தர். மாவட்ட பொரு ளாளர் கோபி மாவட்டகுழு உறுப்பினர் தர்சன்,கிஷோர், விஷ்வா உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித் தும், யுஜிசி சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

The post யுஜிசியின் புதிய வரைவு அறிக்கையை திரும்பபெறக்கோரி அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : UGC ,Mannargudi ,Union Government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை...