×

பாபநாசம் சுந்தரசோழ விநாயகர் கோயில் வருஷாபிஷேகம்

 

கும்பகோணம், பிப்.8: கும்பகோணம் அருகே பாபநாசம் சுந்தரசோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்திருக்கும் சுந்தரசோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, சிறப்பு ஹோமங்களும், மஹா பூர்ணாஹுதி, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்று, சுந்தரசோழ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பாபநாசம் சுந்தரசோழ விநாயகர் கோயில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Papanasam Sundarachola Vinayagar Temple ,Varushabishekam ,Kumbakonam ,2nd year ,year ,Sundarachola Vinayagar Temple ,Papanasam, Thanjavur district ,
× RELATED கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா