×

பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

 

கும்பகோணம், பிப்.8: கும்பகோணம் அடுத்த பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமையாசிரியை நீலாதேவி தலைமையில் நடைபெற்றது. முதுகலை பட்டதாரி ஆசிரியை மாலதி வரவேற்று பேசினார். உதவி தலைமை ஆசிரியை கல்யாணி ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரபா, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் சம்மந்தம், தன்னார்வலர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதுகலை பட்டதாரி ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.

The post பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Babanasam Government Women's Secondary School ,Kumbakonam ,Papanasam Government Women's ,Secondary ,School ,Niladevi ,MALADI ,Dinakaran ,
× RELATED அரசு போக்குவரத்து கழகங்களில் இன்று...