×

பஸ், பைக் மோதி 2 வாலிபர்கள் பலி

 

பாலக்காடு, பிப்.8: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் அருகே சுற்றுலா பயணிகள் பஸ்சும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். அடூரை அடுத்த அம்மகண்டராவை சேர்ந்தவர்கள் அமல் (20), நிஷாந்த் (23). இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து பைக்கில் பத்தனம்திட்டாவிலிருந்து அடூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிரே அடூரிலிருந்த பந்தளத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் பஸ் அடூர் நால்பதிநாயரம்படி பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரண்டு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களை போலீசார் மீட்டு அடூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இரு வாலிபர்களும் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

The post பஸ், பைக் மோதி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Adoor ,Pathanamthitta district ,Kerala ,Amal ,Nishant ,Ammakandara ,Dinakaran ,
× RELATED மன்னார்காடு அருகே பரபரப்பு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை