×

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 132 பேர் மீது வழக்கு

 

கோவை, பிப்.8: கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அபராத தொகை ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வந்தது. இதில், குடிபோதையில் வாகனங்களை இயக்கியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அதிகளவில் நிலுவையில் இருந்தன.

எனவே, நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின்படி நடமாடும் நீதிமன்றம் (மொபைல் கோர்ட்) கடந்த 1-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த நடமாடும் நீதிமன்றம் மூலம் கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாநகரில் குடிபோதையில் வாகனங்களை இயக்கியது தொடர்பாக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் என மொத்தம் 772 வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.77 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post குடிபோதையில் வாகனம் ஓட்டிய 132 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED சாலைகளில் சுற்றித் திரியும்...