×

ஊழல் குற்றச்சாட்டில் கைது இந்திய வம்சாவளி மாஜி அமைச்சர் வீட்டுக்காவலுக்கு மாற்றம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. 7 ஆண்டுகளில் அவர் தனது பதவிக்காலத்தில் ரூ.30 கோடி வரை ஊழல் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 12 மாத தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் நன்னடைத்தையுடன் நடந்ததால் அவரை வீட்டுக்காவலில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டுகாவல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கை மின்னணு கண்காணிப்பு டேக்கை பயன்படுத்தி கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊழல் குற்றச்சாட்டில் கைது இந்திய வம்சாவளி மாஜி அமைச்சர் வீட்டுக்காவலுக்கு மாற்றம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Majhi Minister ,SINGAPORE ,SINGAPORE, S.S. ,INDIAN ,Iswaran ,Majhi ,Dinakaran ,
× RELATED புறப்பட்ட சிறிது நேரத்தில்...