×

பிரேசிலில் பஸ் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: 2 பேர் உயிரிழப்பு

சாவ் பாவ்லோ: பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் இருந்து தெற்கு ரியோ கிராண்டே டே சுல் மாநிலத்தில் உள்ள போர்டோ அலெக்ரேவுக்கு நேற்று சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் பார்ரா பண்டா என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கீழே விழுந்து, சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது மோதியது.

இதில் விமானமும், பேருந்தும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவரும், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பிரேசிலில் பஸ் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Brazil ,Sao Paulo ,Sao Paulo, Brazil ,Porto Alegre ,Rio Grande de Sul ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை தகுதிச் சுற்று நெய்மர் இல்லாத பிரேசில்