- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025
- புது தில்லி
- துணை
- முதல் அமைச்சர்
- தின மலர்
சென்னை: புது டெல்லியில் மார்ச் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ 2025 போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர், வீராங்கனைகளுக்கு செலவின தொகையாக தலா ரூ.65 ஆயிரம் வீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, மொத்தம் ரூ.10.40 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும், கஜகஸ்தான் நாட்டில் வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை உலக வாள்வீச்சு கூட்டமைப்பு நடத்தும் ஜூனியர் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு வீராங்கனை பிளெஸ்ஸிலா சங்மா, வீரர் அரவிந்தன் ஆகியோருக்கு செலவின தொகையாக தலா ரூ.3.15 லட்சம் வீதம் ரூ.6.30 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
The post 18 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.16.70 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.