- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- NR காங்கிரஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேஜா கூட்டணி அரசு
- பாஜக…
- தின மலர்
புதுச்சேரி, பிப். 8: வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குபின் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது. 2 கட்சிகளின் மேலிடம் சுமூகமாக பேசி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் பிரச்னைகளை சமாளித்து வருகின்றன. இதனிடையே அடுத்தாண்டு தமிழகம், புதுச்சேரியில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தவெக போட்டியிட உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள புஸ்சி ஆனந்த், புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால் இங்கும் கட்சியை வளர்க்கும் நடவடிக்கையில் தவெக பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நடிகர் விஜய், கட்சி தொடங்கியதும் முதல்வர் ரங்கசாமி, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சை தனது வீட்டில் அமர்ந்தபடி டிவியில் முதல்வர் ரங்கசாமி பார்த்தார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தேர்தலில் என்ஆர் காங்கிரசுடன், தவெக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழா நேற்று இசிஆரில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி உரையாற்றினார். அப்போது என்ஆர் காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. காமராஜர் கொள்கை அடிப்படையில் புதுச்சேரியில் ஆட்சி நடைபெறுவதுபோல் தமிழகத்திலும் ஆட்சி வர வேண்டும் என்று கேட்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் வாய்ப்புள்ளது. என்ஆர் காங்கிரஸ் கட்சி மீது புதுவை மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் புதுச்சேரியில் கூட்டணி கட்சி ஆதரவோடு பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆவேசமாக முழக்கமிட்டதோடு, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பாஜவுடன் கூட்டணி தொடருமா?
என்ஆர் காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்ற பின் முதல்வர் ரங்கசாமியிடம், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, ‘அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்’ என பதிலளித்தார். மேலும் என்ஆர் காங்தவெகவுடன் கூட்டணி அமைக்க திட்டம்? தமிழகத்தில் புதிதாக தவெகவை தொடங்கிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் முதல்வர் ரங்கசாமியின், இந்த பேச்சால் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரவுள்ள தேர்தலில் தேஜ கூட்டணியில் இருந்து என்ஆர் காங்கிரஸ் விலகி, தவெகவுடன் இணைந்து களம் காணுமா? என்ற எதிர்பார்ப்பு இருகட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களிடம் எழுந்துள்ளது. பொதுமக்களும் ரங்கசாமியின் இருமாநிலம் தொடர்பான அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கிரஸ், கூட்டணி கட்சி ஆதரவோடு தேர்தலில் பெரிய வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தார்.
The post வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு appeared first on Dinakaran.