டாக்கா: வங்கதேசத்தில் அவாமி லீக் தலைவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தொடர்ந்து 2 வது நாளாக அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்துவிட்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன் பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இணைய தளம் மூலமாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுவதற்கு நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஜிபுரின் வீட்டின் முன் போராட்டம் நடந்தது. அப்போது முஜிபுரின் வீட்டை இடித்து தள்ளினர். ஹசீனா வீட்டிற்கும் தீ வைத்தனர். இந்த வன்முறைக்கு ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் 2வது நாளாக நேற்று ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் தாக்கப்பட்டன. பல இடங்களில் முஜிபுர் ரஹ்மானின் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டன. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்முறைகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
The post வங்கதேசத்தில் 2 வது நாளாக வன்முறை ஷேக்ஹசீனா கட்சியினரின் வீடுகளுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.