புகாரெஸ்ட்: முன்னாள் நெம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹலேப் (33) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ருமேனியாவை சேர்ந்த சிமோனா 2006ம் ஆண்டு முதல் சர்வதேச களத்தில் அறிமுகமானார். இவர் 2018ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன், 2019ம் ஆண்டு விம்பிள்டன் ஓபன் என கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 24 போட்டிகளில் ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். மேலும் ஆஸ்திரலேியா ஓபனில் 2018ம் ஆண்டு இறுதி ஆட்டம் வரையிலும், 2015ம் ஆண்டு யுஎஸ் ஓபனில் அரையிறுதி வரையிலும் அதிகபட்சமாக முன்னேறி இருக்கிறார்.
64 வாரங்கள் உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக சிமோனா திகழ்ந்தார். காயங்கள் காரணமாக பலமுறை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். போதை மருந்து பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று மீண்டார். இந்நிலையில் ருமேனியாவில் நடந்த டிரான்சில்வேனியா ஓபன் பெண்கள் டென்னிஸ் தொடரில் சிமோனா பங்கேற்றார். அதில் முதல் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை லுசியா பிரான்சேட்டியிடம் 1-6, 1-6 என நேர் செட்களில் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு தனது ஓய்வை அறிவித்தார். சிமோனாவின் ஓய்வு அறிவிப்பு சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக உள்ளது.
The post டென்னிசில் முன்னாள் நம்பர் 1: ருமேனியா வீராங்கனை சிமோனா ஓய்வு அறிவிப்பு appeared first on Dinakaran.