×

2 மீனவர்களுக்கு சிறை 13 பேருக்கு அபராதம்: இலங்கை கோர்ட் அதிரடி

ராமேஸ்வரம்: கடந்த டிச. 24ல் ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களில் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து தலைமன்னார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக், 17 மீனவர்களில் 13 மீனவர்களுக்கு தலா இலங்கை மதிப்பு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்), 2வது முறையாக சிறை பிடிக்கப்பட்ட 2 மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், 2 மீனவர்களுக்கு பிப். 21ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post 2 மீனவர்களுக்கு சிறை 13 பேருக்கு அபராதம்: இலங்கை கோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sri Lankan court ,Rameswaram ,Sri Lankan Navy ,Vavuniya prison ,Thalaimannar court ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்..!!