மாதவரம்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதவரம் ஜி.என்.டி.சாலை பொன்னியம்மன் மேடு அருகில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேப்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் 20,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் வகையில், 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அரங்கம் உள்பட பங்கேற்க உள்ள அனைவருக்கும் சிறப்பான ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வேலை வழங்கும் நிறுவனங்கள், பங்கேற்பதோடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும் நடைபெறுகிறது. இதில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் பார்மசி, பொறியியல் போன்ற தகுதிகள் பெற்ற அனைவரும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாதவரத்தில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.