×

மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்.. காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

காரைக்கால்: மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நடப்பதையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 202-ஆவது ஆண்டு கந்தூரி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற 08.02.2025 (சனிக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வருகின்ற 15.02.2025 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். மேலும், அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

The post மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்.. காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mastan Sahib Dharga Khanduri Festival ,Karaikal ,MASTAN SAHIB VALIULLAH ,KARAIKAL DISTRICT ,KANDURI FESTIVAL ,TARGA ,Mastan Sahib Dhaka ,New Year ,Dinakaran ,
× RELATED திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்...