×

பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு சம்பவம்; கிரீஸ் நாட்டு தீவீல் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

கிரீஸ்: பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நிகழும் என்ற அச்சத்தில் கிரீஸ் நாட்டு தீவு ஒன்றில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான சான்டோரினி தீவு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகும். ஜனவரி மாத இறுதியில் திடீரென சான்டோரினி தீவில் சரமாரியாக நிலநடுக்கங்கள் ஏற்படத் தொடங்கின. ரிக்டரில் 3 ஆக பதிவான நிலநடுக்கங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் பதிவானதால் எரிமலை வெடித்தது. சான்டோரினி தீவில் கிரீஸ் நாடு அவசர நிலையை பிரகடனம் செய்ததை அடுத்து அங்கிருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறினர்.

The post பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு சம்பவம்; கிரீஸ் நாட்டு தீவீல் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : MAJOR ,EARTHQUAKE, ,VOLCANIC ERUPTION INCIDENT ,GREECE ,ISLAND ,Santorini ,Great Earthquake ,Volcanic Explosion Incident ,Greece Country Island ,Dinakaran ,
× RELATED மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சுற்றுலா...