பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomatoவின் பெயர் Eternal என மாற்றம்!!

டெல்லி : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomatoவிற்கு Eternal என்ற புதிய பெயர் சூட்டப்பட்டு, புதிய லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. Zomato நிறுவனத்தின் நிர்வாக குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவினரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். Zomato பங்குத் தாரர்களுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் Zomato.com என்ற இணையதளத்தின் முகவரியும் eternal.com என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடக்கமும் முடிவும் இல்லாதது என பொருள்படும் eternal என்பது சக்திவாய்ந்த பெயர் என்றும் இது வெறும் பெயர் மாற்றம் அல்ல ஒரு குறிக்கோளுக்கான அறிவிப்பு என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் Eternal நான்கு முக்கிய வணிகங்களை உள்ளடக்கியது – Zomato, Blinkit, District மற்றும் Hyperpure” என அதில் தெரிவித்துள்ளார். வின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், உணவு விநியோக பிராண்ட் மற்றும் செயலியில் இருந்து நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomatoவின் பெயர் Eternal என மாற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: