×

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்ட மருத்துவ முகாம்

சாத்தூர், பிப். 7: சாத்தூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் சாத்தூர் வட்டத்திலுள்ள கிராமங்களில் இருந்து 54 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில், 40 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. 9 பேருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இம்முகாமை, விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார். மகளிர் திட்ட பாலின வள மேலாளர் குமாரி, விருதுநகர் மாவட்ட உரிமைகள் திட்ட செயலாக்கும் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாக இயக்குனர் கணேஷ் பாண்டியன், நிபுணர் குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், லாவண்யா மற்றும் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்ட மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Rights Scheme Medical Camp ,Disabled ,Sattur ,Tamil Nadu Rights Scheme Medical Camp for the Disabled ,Sattur Government Hospital ,Sattur taluk ,Rights Scheme Medical Camp for the Disabled ,
× RELATED சாத்தூரில் புதிதாக போட்ட நடைபாதையில் பெட்டிக்கடைகள் ஆக்கிரமிப்பு