- திருப்பூர்
- திருப்பூர் புதிய பேருந்து நிலையம்
- கரூர்
- திருச்சி
- புதுக்கோட்டை
- ஜெயங்கொண்டம்
- திருவாரூர்
- நிலையம்
- அவட்டி
- தின மலர்
திருப்பூர், பிப்.7: திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ஜெயங்கொண்டம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் ஜெயங்கொண்டம் பகுதிக்கு புறப்பட்ட அரசு பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பழுதாகி நின்றது.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணித்த பொதுமக்கள் இறங்கி பேருந்தை சிறிது தூரம் தள்ளி சென்றனர். உடனடியாக பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே மீண்டும் ஜெயங்கொண்டத்திற்கு இயக்கப்பட்டது.
The post அரசு பேருந்து பழுதால் அவதி appeared first on Dinakaran.