×

பல்லடத்தில் வரி செலுத்தாத வீட்டின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

 

பல்லடம், பிப்.7: பல்லடம் நகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் குடிநீர் கட்டணம் செலுத்தாத ஒரு வீட்டில் குடிநீர் குழாய் இணைப்பை நகராட்சி ஆணையாளர் மனோகரன் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் துண்டித்தனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில்: பல்லடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

The post பல்லடத்தில் வரி செலுத்தாத வீட்டின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Palladam Municipality ,Kosavampalayam Road ,Dinakaran ,
× RELATED முதல்வர் பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டம்