×

மயங்கி விழுந்த முதியவர் சாவு

 

திருப்பூர், பிப்.7: திருப்பூர், சாமளாபுரம்-காரணம்பேட்டை ரோடு, கொம்பக்காடு பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது குறித்து இச்சிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பரிமளா தேவி அளித்த புகாரின பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயங்கி விழுந்த முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Kompakkadu ,Chamalapuram-Karanampettai Road, Tiruppur ,Tiruppur Government Medical College Hospital ,
× RELATED திருப்பூரில் போக்குவரத்து அலுவலர்கள்...