×

தாளூர் செக்போஸ்டில் தீவிர வாகன சோதனை

 

பந்தலூர், பிப்.7: பந்தலூர் அருகே தாளூர் சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் தாங்கள் வைத்திருக்கும் பைகளில் பிளாஸ்டிக் பொருட்களை மறைத்து வைத்து உபயோகப்படுத்தி வீசி எறிவதாக புகார்கள் வரும் நிலையில் தற்போது கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்நிலை, வனத்துறை உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பந்தலூர் அருகே உள்ள தாளூர் உள்ளிட்ட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பணியில் இருக்கும் ஊழியர்கள் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தாளூர் செக்போஸ்டில் தீவிர வாகன சோதனை appeared first on Dinakaran.

Tags : Thalur ,Pandalur ,Kerala ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED எருமாடு வெட்டுவாடி பொது மக்கள் நிலப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்