- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் நகரம்
- பொலிஸ் ஆணையாளர்
- சரவணா சுந்தர்
- ஆம்னி பேருந்து
- ரத்னபுரா
- காவல் நிலையம்
- தின மலர்
கோவை, பிப்.7: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் தேவநாதன் மேற்பார்வையில் ரத்தினபுரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆம்னி பஸ் நிலையம், அனைத்து பார்சல் சர்வீஸ் மையங்கள், மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகள், வீடுகள், ரயில்வே தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 1 உதவி கமிஷனர் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சோதனையின்போது சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை நடத்தப்பட்டது. மேலும் பார்சல் சர்வீஸ் மையங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் பொருட்கள் அனுப்புகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது சந்தேகத்திற்கிடமான 8 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இனி வரும் நாட்களில் இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
The post கோவை நகரில் கஞ்சா சோதனை : 8 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.