×

விளையாட்டு போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு

 

கோவை, பிப். 7: கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இந்நிலையில், கோவை அத்லெட்டிக் கிளப்பின் 25ம் ஆண்டு விழா கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது. இதில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.புவனேஸ்வரி, கோவை அத்லெடிக் கிளப் தலைவர் டாக்டர்.சுமன், துணைத் தலைவர் ரத்தினவேல், செயலர் சீனிவாசன், கோவை அத்லெட்டிக் சேர்மேன் விஜய்குமார், கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணா, சிடிஏஏ செயலாளர் சம்சுதீன், பொருளாளர் ஜான்சிங்கராயர், ஸ்ருதி ஏஜன்சீஸ் உரிமையாளர் சரவண காந்தி, அத்யாயனா பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post விளையாட்டு போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED சாலைகளில் சுற்றித் திரியும்...