- மக்கள் சந்திப்பு திட்ட முகாம்
- கிருஷ்ணராயபுரம்
- கலெக்டர்
- மு. தங்கவேல்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. சிவகாமசுந்தரி
- பாலராஜபுரம் பஞ்சாயத்து
- பாலராஜபுரம்
- கரூர்
- தின மலர்
கிருஷ்ணராயபுரம், பிப்.7: கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 51 பயனாளிகளுக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர்.மீ.தங்கவேல் அவர்கள் எம்எல்ஏ.க.சிவகாமசுந்தரி ஆகியோர் வழங்கினார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலராஜபுரம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில், கிருஷ்ணராபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி முன்னிலையில் நடைபெற்றது. மக்கள் சந்திப்பு முகாமில் கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அதிக முக்கியத்துவம் அளித்து விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்றிட அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வுகாண ஏதுவாக இன்றைய தினம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் பாலராஜபுரத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் விரைந்து தீர்வுகான அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 70 % மனுக்கள் மீது தீர்வுகாணப்பட்டு மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அவர்களும் சமுதாயத்தில் மற்றவர்களை போல இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே ஆகும். கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை முதல்வரின் கிராம சாலைகளின் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு வகையான தொழில்புரிவதற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்கள் குழந்தைகள் திருமணம் தொடர்பான புகார்களுக்கு 181 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் வருகை தந்து பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக தனிப்பட்டா, கூட்டுப்பட்டா, சாதி சான்று, இருபிடச்சான்று, வருமான சான்று, முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை. பட்டாவில் பெயர் மாற்றம், குடும்ப அட்டை, கல்வி கடன். சிறுகுறு விவசாய சான்று போன்ற பல்வேறு மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் நத்தம் இணையவழி பட்டா 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும், 27 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.4.85 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1.41 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.70.336/- மதிப்பீட்டில் விதைகளும், மகளிர் திட்டத்தின் மூலம் ள2 பயனாளிகளுக்கு ரூ.70000/- மதிப்பீட்டில் தொழில் முதலீட்டு கடன் உதவிகளும், கூட்டுறவு துறையின் சார்பில் 3 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் , எம்எல்ஏ சிவகாமசுந்தரி ஆகியோர் வழங்கினர்.
முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை கலெக்டர்.மீ.தங்கவேல் , எம்எல்ஏ.க.சிவகாமசுந்தரி , பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் குளித்தலை சுவாதி, சமுக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் பிரகாசம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், இணை இயக்குநர் (வேளாண்மை). சிவானந்தம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சத்திய பால கங்காதரன், சமூக நல அலுவலர் சுவாதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ப்ரியா, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகர், அனைத்துத்துறை அலுவலர்கள், கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post கிருஷ்ணராயபுரம் அருகே மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: 51 பேருக்கு ₹29.67 லட்சத்தில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.