- Karuvela
- ராயனூர்-செல்லாண்டிபாளையம் சாலை
- கரூர்
- கரூர் மாவட்டம்
- Rayanur
- கரூர் மாநகராட்சி
- Chellandipalayam
- தின மலர்
கரூர், பிப்.7:கரூர் மாவட்டம், ராயனூர் செல்லாண்டிபாளையம் சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இருந்து செல்லாண்டிபாளையத்துக்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை சாலை குறுகிய நிலையில் உள்ளது. அதிகளவு முட்செடிகள் சாலை வரை படர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் இந்த பகுதியினர் சாலை யை கடந்து செல்ல மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு சாலையை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அகற்ற தேவை யான ஏற்பாடுகளை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ராயனூர்- செல்லாண்டிபாளையம் சாலையில் கருவேல முட்செடிகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.