உயர்கல்வி பாதிக்கக்கூடாது துணைவேந்தரை அரசு நியமிக்க வேண்டும்: ராமதாஸ் கருத்து

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: ஆளுநர் அரசுக்கு இடையிலான மோதலால் உயர்கல்வி பாதிக்கக்கூடாது. துணைவேந்தர் இல்லாமல் பாதிப்பு ஏற்படுவதால் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கூறி துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமான 4 வழிச்சாலைகள் அமைக்கப்படுவதும் அதில் பயணிக்க சுங்கக் கட்டணம் வசூலிப்பதும் சரியானது. ஆனால் முழு கட்டணம் வசூலித்த பிறகு சுங்க கட்டண கொள்ளையில் ஈடுபடக்கூடாது, சுங்கச் சாவடிகளை குறைக்க வேண்டும். போட்டி தேர்வுகள் மூலமாக சிறப்பு மருத்துவர்கள் நியமிக்காமல் நேர்காணல் மூலமாக தேர்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நேர்காணல் மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டால் அது முறைகேட்டிற்குதான் வழிவகுக்கும்.

போச்சம்பள்ளியில் பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.ஆசிரியர்கள் செய்த தவறை மன்னிக்க முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இருதரப்புக்கும் பாதகமில்லாமல் தீர்வு காணவேண்டும். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post உயர்கல்வி பாதிக்கக்கூடாது துணைவேந்தரை அரசு நியமிக்க வேண்டும்: ராமதாஸ் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: