×

கம்பெனி பஸ் கவிழ்ந்து விபத்து 32 தொழிலாளர்கள் படுகாயம் செய்யாறு அருகே ஆரணி சாலையில்

செய்யாறு, பிப். 7: செய்யாறு அருகே ஆரணி சாலையில் கம்பெனி பஸ் கவிழ்ந்து இரவு ஷிப்டுக்குச் சென்ற 32 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சிப்காட் தொழிலாளர்கள் 32 பேர் இரும்பேடு பகுதியில் இருந்து செய்யாறு சிப்காட் காலணி தொழிற்சாலைக்கு நேற்று இரவு இரண்டாவது ஷிப்ட்க்கு செல்வதற்காக இரும்பேடு கிராமத்திலிருந்து நேற்று இரவு 8 மணியளவில் புறப்பட்டு சென்றனர். பஸ்சை வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த தரணி ஓட்டினார். செய்யாறு நோக்கி வந்தபோது ஆரணி சாலையில் இரவு 8.30 மணி அளவில் சிவபுரம் அருகே உள்ள வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இழந்து சாலை ஓர பள்ளத்தில் இறங்கியதும் பின்னர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்தவர்கள் தொழிலாளர்களை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆரணி பகுதியை சேர்ந்த வினோத் (27), அக்கரபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன்(26), சங்கீதவாடி பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (35), சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா(30), சதுப்பேரிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) உள்ளிட்ட 32 பேர் காயமடைந்தனர் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாழைப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கம்பெனி பஸ் கவிழ்ந்து விபத்து 32 தொழிலாளர்கள் படுகாயம் செய்யாறு அருகே ஆரணி சாலையில் appeared first on Dinakaran.

Tags : Arani Road ,Cheyyar ,Arani ,Tiruvannamalai district ,Irumpedu ,Dinakaran ,
× RELATED செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில்...