- செங்கம்
- இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
- துர்க்கை அம்மன் கோயில் தெரு
- இந்து சமய மற்றும் அறநிலையத் துறை…
- தின மலர்
செங்கம், பிப். 7: செங்கம் துர்க்கையம்மன் கோயில் தெரு செய்யாற்றங்கரைமேல் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருந்ததை காலி செய்து இந்து சமய அறநிலை துறைக்கு வழங்குமாறு அறநிலைத்துறை நிர்வாகம் பலமுறை உத்தரவு நகல் மூலம் தெரிவித்தனர். ஆனால் வீட்டை காலி செய்யவில்லையாம். இதனால் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் இணை ஆணையர் பொக்லைன் இயந்திர உதவியுடன் வீட்டை இடித்து அகற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இந்து சமய அறநிலைத்துறை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, செங்கம் கோயில்கள் செயல் அலுவலர் தேன்மொழி, ஆய்வாளர்கள் சத்யாடிஎஸ்பி. ராஜன். தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து காவல், வருவாய், தீயணைப்பு, மின்வாரியம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உதவியுடன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டி உள்ள வீட்டை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிட்டதக்கது.
The post ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தை appeared first on Dinakaran.