×

₹12.34 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

பரமத்திவேலூர், பிப்.7: பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் ‌9ஆயிரம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ ஒன்று ₹149.10க்கும், குறைந்தபட்சமாக ₹123.45க்கும், சராசரியாக ₹148.10க்கும் ஏலம் போனது. 2ம் தரம் அதிக பட்சமாக ₹120.15க்கும், குறைந்த பட்சமாக ₹106.88க்கும், சராசரியாக ₹118.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹12 லட்சத்து 34 ஆயிரத்து 500க்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, கொப்பரை விலை குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

The post ₹12.34 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Copra ,Paramathivellur ,National Agricultural Market ,Vengamet, Pothanur ,Dinakaran ,
× RELATED ₹2.15 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்