×

காதலிப்பதாக கூறி சிறுமிக்கு தொல்லை

பரமத்திவேலூர், பிப்.7: பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி, பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எனது மகள் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். அப்போது, எங்கள் பகுதியைச் சேர்ந்த எனது மகளுக்கு அண்ணன் முறை கொண்ட கண்ணன்(32) என்பவர், என் மகளை பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார். மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இதனையறிந்த நான், எனது மகளை உறவினர் வீட்டில் விட்டிருந்தேன். இதனால் மனமுடைந்த எனது மகள், கடந்த 30ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால் உயிர் பிழைத்தார். மைனர் பெண்ணான எனது மகளுக்கு காதலிப்பதாக கூறி தொல்லை கொடுக்கும் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதையடுத்து, கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post காதலிப்பதாக கூறி சிறுமிக்கு தொல்லை appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Paramathi police station ,Kannan ,
× RELATED திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம்