×

திருமணம் செய்வதாக உல்லாசம்: இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது


மாதவரம்: அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது பெண். இவர் புரசைவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் தீபக்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக்குமார் திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த பெண்ணை பலமுறை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாகவே தீபக்குமார் அந்த பெண்ணிடம் இருந்து சற்று விலகி பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெண் தீபக்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் தீபக்குமார் அதனை மறுத்து உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை ஏமாற்றி தீபக்குமார் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது இதையடுத்து மாதவரம் ஏவிஎம் நகர் பகுதியைச் சேர்ந்த தீபக்குமார் (25) என்பவரை நேற்று கைது செய்தனர். பிறகு அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருமணம் செய்வதாக உல்லாசம்: இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Ayanavaram ,Purasaivakkam ,Deepakkumar ,Dinakaran ,
× RELATED அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது