- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தயாநிதி மாறன்
- மக்களவை
- புது தில்லி
- யூனியன் பிஜேபி
- தமிழ்
- தமிழ்நாடு
- யூனியன்
- தமிழ்நாடு…
- தின மலர்
புதுடெல்லி: தமிழ்நாட்டில் புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதா? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய பட்ஜெட்டில் இருந்து எந்தவொரு நிதியும் தராமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு, வருகின்ற நிதியாண்டில் தமிழ்நாட்டில் புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதா எனவும் தற்போதுள்ள நெடுஞ்சாலைகளில் ஏதேனும் விரிவாக்கங்கள் அல்லது மேம்படுத்தல்கள் தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு: வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டில் புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதா?
மாநிலத்திற்குள் இணைப்பை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள நெடுஞ் சாலைகளில் ஏதேனும் விரிவாக்கங்கள் அல்லது மேம்படுத்தல்கள் திட்டமிடப்பட்டுள்ளதா?
தமிழ்நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, தொழில்துறை வழித்தடங்களான சென்னை பெங்களூரு மற்றும் சென்னை – கன்னியாகுமரி வழித்தடங்களை மேம்படுத்த அல்லது விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில் மையங்களில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் வரவிருக்கும் திட்டங்களில் சூரிய சக்தியில் இயங்கும் நெடுஞ் சாலைகள் அல்லது மரங்களால் சூழப்பட்ட சாலைகள் போன்ற பசுமை முயற்சிகளை இணைக்க திட்டங்கள் உள்ளதா?
தமிழ்நாட்டில் சாலை கட்டுமானத் திட்டங்களில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்ய ஒன்றிய அரசு எவ்வாறு திட்டமிட்டுள்ளது?
தமிழ்நாட்டின் ஆற்றுப்பாதைகள், மலைப்பாங்கான அல்லது மலைப்பகுதிகள் அல்லது நெரிசல் மிகுந்த பகுதிகள் போன்ற முக்கியமான பகுதிகளில் பாலங்கள் அல்லது சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான புதிய முன்மொழிவுகள் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.
The post புதிய தேசிய நெடுஞ்சாலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.