×

பீகாரில் ஜேடியு தலைவர் சுட்டு கொலை

கயா: பீகார் மாநிலம் கயா மாவட்டம் பெலகஞ்ச் பகுதியில் உள்ள சுரிஹாரா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் மிஸ்ரா. ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மிஸ்ரா, பெலகஞ்ச் பகுதிக்குள்பட்ட சிரைரா பஞ்சாயத்து துணை தலைவராகவும், அக்கட்சியின் தொகுதி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். மகேஷ் மிஸ்ரா நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் வௌியே இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மிஸ்ராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பீகாரில் ஜேடியு தலைவர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : JDU ,Bihar ,Gaya ,Mahesh Mishra ,Surihara ,Belaganj ,Gaya district of ,Mishra ,Janata Dal United party ,vice president ,Siraira ,panchayat ,Dinakaran ,
× RELATED விளையாட்டு போட்டி துவக்க விழாவில்...