×

வியாசர்பாடி, ஓட்டேரி பகுதிகளில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 4 ரவுடிகள் அதிரடி கைது

பெரம்பூர்: செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மீரான் (44). செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (44), கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிரி (22). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மதியம் தங்களது காரில் வியாசர்பாடி பி கல்யாணபுரம் மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த மர்ம நபர் அவ்வழியாக வந்த 3 கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்த வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதையில் தகராறில் ஈடுபட்ட வியாசர்பாடி சி கல்யாணபுரம் பகுதியை அஜித் (எ) ஸ்பீடு அஜித் (22) என்பவரை கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ளன. இதையடுத்து அஜித் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சங்கர் (70) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்த வழக்கில் செங்குன்றம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் (20) என்பவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்ரீதர் (42) என்பவரை மிரட்டி பணபறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (எ) அப்பு (27) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் பிடிக்க முற்பட்ட போது கீழே விழுந்ததில் வலது கால் உடைந்தது. போலீசார் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டுப்போட்டு உள்ளனர். இதேபோல், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பரத் (எ) விஷ்வா (19) என்பவரை தாக்கிய வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பெரிய மேடு பகுதியைச் சேர்ந்த சர்மா (28) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

The post வியாசர்பாடி, ஓட்டேரி பகுதிகளில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 4 ரவுடிகள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Otteri ,Perambur ,Meeran ,Chengunram ,Mahendran ,Chengalpattu Madhurantakam ,Giri ,Kolathur ,Vyasarpadi B Kalyanapuram Main Road ,Dinakaran ,
× RELATED தலித்துகள் மீது வன்முறை கண்டித்து ஆர்ப்பாட்டம்