- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆஸி.
- சிட்னி
- ஆஸ்திரேலியா
- கம்மின்ஸ்
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்
- பாக்கிஸ்தான்
- தின மலர்
சிட்னி: ஐசிசி சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விலகி உள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணியில் இருந்து காயம் காரணமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர வீரர்கள் விலகி உள்ளனர்.
கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்சுக்கு கணுக்காலில் காயப்பிரச்னை உள்ளதால் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகி உள்ளார். இதேபோல் விலா பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் மற்றொரு வேகபந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் விலகி உள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீள முடியாமல் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சர்வதேச போட்டியில் இருந்து விலகி நீண்ட ஓய்வுக்கு சென்றுள்ளார். எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை கருதி அவர் இந்த முடிவை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மிட்செல் மார்ஷூம் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
காயம் காரணமாக நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விலகி நிலையில், ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்த மற்றொரு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து உள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பிடித்த நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விலகி உள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் கம்மின்ஸ் விலகி உள்ளதால், இந்த தொடருக்கு டிராவிஸ் ஹெட் அல்லது ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. விலகி வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
The post ஐசிசி சாம்பின்ஸ் கோப்பை தொடர் ஆஸி.க்கு அடி மேல் அடி நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விலகல் appeared first on Dinakaran.