×

கஞ்சா சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது: மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை


காஞ்சிபுரம்: மேற்கு வங்க மாநிலம், பங்குரா பகுதியை சேர்ந்தவர் அருண் ரைடாஸ் மகன் கோபி ரைடாஸ் (25). மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பங்குரா பகுதியில் இருந்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கஞ்சாவை ரயில் மூலம் எடுத்து வந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தமாக வாங்கி வந்த கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக பாக்கெட் செய்து, அதனை ஒரு பாக்கெட் 500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமாலக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விசாரணையை தீவிரப்படுத்திய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், கோபி ரைடாஸ் செல்போன் சிக்னலை கண்காணித்தனர். அதன்படி, ஒரகடம் கண்டிகை சந்திப்பில் அவர் தங்கியிருந்த அறையை நேற்று சுற்றிவளைத்த போலீசார், அங்கு நடத்திய சோதனையில் சுமார் 1.500 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். மேலும், கோபி ரைடாஸ்சை கைது செய்த போலீசார், அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது: மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : North State ,Kancheepuram ,Arun Raidas ,Gobi Raidas ,Bhangura region, ,West Bengal ,Bhangura ,
× RELATED ஆணிகளால் ஆயுளை இழக்கும் மரங்கள்…