- சமாஜ்வாடி
- சிவன்மலை தேர் திருவிழா
- காங்கேயம்
- சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா
- காவடி
- தின மலர்
காங்கேயம், பிப்.6: சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பலர் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேர் திருவிழாவின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி யாதவ் க்ரிஷ் அசோக், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமேரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில் தேர் சுற்றி வரும் பாதை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்ய வேண்டும். பக்தர்கள் அன்னதானம் செய்வதற்கான இடம் ஒதுக்குவது. வாகனங்கள் நிறுத்துமிடம், சிசிடி கேமரா எந்தெந்த பகுதியில் அமைப்பது, பெண் போலீசாரை பணியில் ஈடுபட செய்வது என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டனர். இந்த தேர்த்திருவிழாவின் போது 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
The post சிவன்மலை தேர்திருவிழா பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.