- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் பீலமேடு
- SNDP யோகம்
- பீளமேடு ரேணுகா தேவி கோயில்
- மணிகண்டன்
- விஜிதா
- காந்திநகர்
- கோவை…
- தின மலர்
கோவை, பிப். 6: எஸ்என்டிபி யோகம் என்ற சங்கத்தின் கோவை பீளமேடு கிளை சார்பாக 18வது ஆண்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் பீளமேடு ரேணுகா தேவி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கோவை காந்தி மாநகரை சேர்ந்த மணிகண்டன், விஜிதா தம்பதி மகள் ரியா (11) என்ற சிறுமிக்கு வளர்ந்து வரும் இளம் சாதனையாளர் என்ற விருதை சங்க பாதுகாப்பு அதிகாரி கேஆர் பாலன் வழங்கினார். கவுன்சிலர் சித்ரா, மதிமுக பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். விருது பெற்ற சிறுமி பிஎஸ்ஜி பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தலையில் தீக்கரகம் வைத்து கண்ணாடி துண்டுகளில் சுமார் அரை மணி நேரம் நடனமாடி போனிக்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற புத்தகத்தில் இடம்பிடித்தார்.
கலைத்தென்றல் விருது, கேபி சுந்தராம்பாள் விருது, இளம் சாதனையாளர் விருது, ஆரஞ்ச் உலக சாதனை, செம்மொழி சாதனை புத்தகம், ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலையரசி விருது, சிங்க பெண்ணே உள்பட பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். இதுதவிர இறகு பந்து விளையாட்டிலும் 10 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு, 2ம் பரிசு மற்றும் 3ம் பரிசு பெற்று உள்ளார்.
இதில் 75க்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சிறுமிக்கு இளம் சாதனையாளர் விருது appeared first on Dinakaran.