×

கரூர் குளித்தலையில் கடும் பனிப்பொழுவு: முகப்பு விளக்கு எரியவிட்டப்படி செல்லும் வாகனங்கள்

 

குளித்தலை, பிப்.5: கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை காலங்களில் அதிக அளவில் மழை பெய்து ஆங்காங்கே நகர்ப்புறம் கிராமப்புறங்களில் குளம் குட்டைகள். நீர்நிலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் தண்ணீர் கஷ்டம் இன்றி விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தை மாதம் தொடங்கியிருப்பதால் ஆங்காங்கே நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

பருவமழை காலம் முடிவடைந்து விட்ட நிலையில் தை மாதம் தரையும் குளிரும் என்ற சொல்லுக்கு ஏற்ப நேற்று குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இதனால் காலை சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் விரைவு ரயில் உயர்ந்தவாரே சென்றது. அதேபோல் திருச்சி கரூர் புறவழிச் சலையில் அதிகாலை முதல் காலை 10 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரிவதில்லை.

இருந்த நேரத்தில் முகப்பு விளக்கு எரிவியுற்றவாறு வாகனங்கள் சென்றன. நகர்ப்புறங்களில் காலை நேரத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிகளில் மக்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். நேற்று திடீர் பணிபுரிவால் எதிரே வரும் ஆட்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 9 மணி வரை வெளியே வராமல் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.

The post கரூர் குளித்தலையில் கடும் பனிப்பொழுவு: முகப்பு விளக்கு எரியவிட்டப்படி செல்லும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Karur Kulithalai ,Kulithalai ,Karur ,Dinakaran ,
× RELATED குளித்தலை அருகே குட்கா விற்றவர் மீது வழக்கு