கரூர், பிப். 5: கரூர் அருகே குட்கா வியாபாரிகளிடம் பணத்தை பதுக்கியதாக வந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக கரூர் எஸ்பிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூர் வெங்கமேடு அருகே வெங்கமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை பேர்களை கைது செய்தனர்.
அந்த சோதனையின் போது, குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேரிடம் இருந்த ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் பதுக்கி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனப்படையில், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் எஸ்ஐக்கள் 2 பேர் உட்பட 8 பேரிடமும் திருச்சி சரக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் 8 பேர்களையும் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
The post குட்கா வியாபாரின் பணம் பதுக்கிய இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.