திருப்பூர், பிப்.5: ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படுத்தப்படும் கற்றல் கற்பித்தலில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான மாநில கற்றல் அடைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஏற்ப புதிய திட்டங்களை செயல்படுத்தவும் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறவும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாநில கற்றல் அடைவு தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று 3ம் வகுப்பு மாணவர்களுக்கும், இன்று (புதன்கிழமை) 5ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை 8ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கும் என தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1185 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆயிரத்து 500 3ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்காக கொள் குறி அடிப்படையில் இந்த தேர்வு எழுதினர். மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு 35 கேள்விகளும், ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு 45 கேள்விகள் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு 50 கேள்விகள் என தேர்வு நடத்தப்படுகிறது.
The post கற்றல் அடைவு தேர்வை 8,500 மாணவ, மாணவிகள் எழுதினர் appeared first on Dinakaran.