ஊட்டி, பிப்.5: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் புள்ளி மான்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்ைத, கரடி, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் உள்ளன. இதுதவிர புள்ளிமான்கள், கடா மான்கள், நீலகிரி லங்கூர் போன்றவைகளும் அதிகளவு உள்ளன.
இதில், யானைகள் மற்றும் காட்டு மாடுகள் அடிக்கடி சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும்போது பார்க்க முடியும். அதேசமயம், புலி, சிறுத்தை, கரடி போன்றவைகளை காண முடியாது. அதே சமயம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் எப்போதும் புள்ளி மான் கூட்டத்ைத காண முடியும். புலிகள் காப்பகம் பசுமையாக காட்சியளித்தாலும் சரி மற்றும் வறட்சி ஏற்பட்டு காய்ந்து போனாலும், இவைகள் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வரும்.
சில சமயங்களில் சுற்றுலா பயணிகள் அளிக்கும் உணவு பொருட்களை வாகனங்களிலேயே வந்து வாங்கிச் செல்லும் இந்த புள்ளி மான்கள், தற்போது முதுமலையில் சற்று பசுமை காணப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக புள்ளிமான்கள் வலம் வருகின்றன. ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
The post முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கூட்டம், கூட்டமாக வலம் வரும் புள்ளி மான்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.