- சூலூர்
- திம்மநாயக்கன்பாளையம்
- சேலகிரிச்சல் பஞ்சாயத்து
- சுல்தான்பேட்டை பஞ்சாயத்து யூனியன்
- கோயம்புத்தூர்
- பஞ்சாயத்து
- தின மலர்
சூலூர், பிப். 5: கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செலக்ரிச்சல் ஊராட்சியில் திம்மநாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 5ம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக மர்ம பூச்சி கடித்து கை கால்களில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் புதர் மண்டி கிடைக்கின்றது. இதில் பூரான், தேள் போன்ற விஷக்கடி பூச்சிகளும் நிறைந்து காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் குழந்தைகள் மர்ம பூச்சிக்கு கடியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியை சுத்தம் செய்து மருந்து அடித்து கொடுக்க வேண்டும் என்று செலக்ரிச்சல் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளோம்.
ஆனால் இதுவரை சுத்தம் செய்யாமல் உள்ளது. எனவே சுல்தான்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இது விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து பூச்சி மருந்து அடித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post புதர் மண்டி கிடக்கும் அரசு ஆரம்பப்பள்ளியில் பூச்சி கடியால் பள்ளி குழந்தைகள் பாதிப்பு appeared first on Dinakaran.