கோவை, பிப். 5: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அரசியல் கட்சிகள் சார்பாக நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் கண்டன நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து பதாதைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் சுதா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
The post மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.