- சிங்கப்பூர்
- தென் கொரியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யுக்தி
- ஆரணி
- கோசஸ்தலா
- கோல்தின்
- பாலாரு
- ஆதியாரு
- தென்னெனாய்
- சிங்கப்பூர்,
- தெற்கு
- கொரியா
- நீர்துறைத்துறை
* வெள்ளக்காலத்தில் வீணாகும் தண்ணீரை மாற்றுவழியில் சேகரிக்க புதிய யுக்தி
* ஆரணி, கொசஸ்தலை, கொள்ளிடம், பாலாறு, அடையாறு, தென்பெண்ணை முகத்துவாரங்களில் உருவாக்க வாய்ப்பு
தமிழ்நாட்டின் அனைத்து நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், நீர் வளங்களை திறம்பட மேலாண்மை செய்யவும் நீர்வளத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் பாசன கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள், நீரொழுங்கிகள், கதவணைகள், நிலத்தடி தடுப்பு சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தி விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு துறைகளின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல் ஆகிய பணிகளில் இத்துறை கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் மாநிலத்தில் 34 ஆறுகள், 17 பெரிய ஆற்று வடிநிலங்கள், 127 துணை வடிநிலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நீர்வளத்துறை மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 90 அணைகளும், 14,134 பாசன ஏரிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நீர் கட்டமைப்புகள் உள்ள தமிழ்நாட்டிற்கு இயற்கையாகவும், பன்மாநில நீர் பகிர்மானம் மூலமாகவும் நீர் கிடைக்கிறது. மழை மூலமாக மட்டுமே நமக்கு நீர் கிடைக்கும். அதுதான் முக்கிய ஆதாரம். குறிப்பாக ஆண்டின் இறுதி காலத்தில் பொழிகிற வடகிழக்கு பருவமழையை நம்பியே உள்ளன. அந்த நேரங்களில் கடலோர மாவட்டங்களில் 50 சதவீதம், உள் மாவட்டங்களில் 40 முதல் 50 சதவீதம் மழை என சராசரியாக 48 சதவீதம் மழை தமிழகத்திற்கு கிடைக்கிறது.
இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்புகின்றன. அதேபோல் 34 ஆறுகளின் 865 டிஎம்சி, அண்டை மாநிலங்களிலிருந்து பன்மாநில ஒப்பந்தங்களின் படி, 260 டிஎம்சி தண்ணீர் தமிழகத்தின் நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கிறது. மேலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் நாள்தோறும் தலா 10 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. இதனாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.
இதனிடையே தமிழகத்தில் 2023ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது கடந்த நவம்பர் மாதம் முதல் பெய்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களும், கடந்தாண்டு விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பினை சந்தித்தன. தொடர் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதே நேரம் மழைநீரால் கிடைக்கும் தண்ணீர் முழுவதும் வீணாக கடலுக்கு செல்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால் மழை இல்லாத காலங்களில் தண்ணீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. அதை மாற்றி அமைக்க மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை நீர்வளத்துறை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் சென்னை மண்டலத்தை பொறுத்தவரை சென்னையை சுற்றியுள்ள 13 மாவட்டங்கள் இதன் கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்த மாவட்டங்களில் மழைக் காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை ஏரி மற்றும் குளங்களில் சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை நீர்வளத்துறை தற்போது தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நீர் நிலைகளுக்கும் மழைநீர் வரவும், நீர் நிலை நிரம்பினால் உபரி நீர் அருகாமையில் உள்ள நீர் நிலைக்கு செல்லும் வகையிலும், நீர் நிலைகளில் இருந்து விளை நிலங்களுக்கு பாசனங்களுக்கு கொண்டு செல்லவும், கூடுதல் நீரை அருகாமையில் உள்ள ஆற்றில் கலந்து கடலில் சங்கமிக்கும் வகையில் பாசனம் மற்றும் வடிகால் கால்வாய் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
ஆனால் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் போதிய பராமரிப்பின்றி போனதால் கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு மழைக்கும், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழைநீர் எல்லாம் வீணாக கடலில் தான் கலந்தது. இவற்றை நீர்நிலைகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ள நீர் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு சென்றாலே பெருமளவில் தண்ணீரை சேமிக்க முடியும்.
இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்கள் மற்றும் வெள்ள காலங்களில் மழை நீரை வீணாக கடலில் கலப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள ஆறுகள் கடலில் சங்கமிக்கும் பகுதியான முகத்துவாரப்பகுதிகயில் கடலோர நீர்த்தேக்கங்கள் உருவாக்க நீர்வளத்துறை ஒரு புதிய திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடலோர நீர்த்தேக்கம் மூலம் காவிரி, வெண்ணாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் முகத்துவாரத்தில் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அதிகளவில் பயன்பெறும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் வெள்ளக்காலங்களில் ஏற்படும் போது வெள்ளப்பெருக்கை தடுக்கவும், கடலில் வீணாக கலக்கும் மழைநீர் தடுக்கவும் ஆரணி, கொசஸ்தலையாறு, கொள்ளிடம், பாலாறு, அடையாறு, வெண்ணாறு மற்றும் தென்பெண்ணையாறு முகத்துவாரங்களில் கடலோர நீர்த்தேக்கங்கள் உருவாக்க திட்டமிடப்பட்ட உள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் பிரச்னை ஏற்படும் போது, கடலோர நீர்த்தேக்கங்கள் அமைப்பட்டு வெள்ள காலங்களில் சேகரமாகும் தண்ணீரை மீண்டும் தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.
அதாவது கடலுக்கும் நிலப்பரப்பிற்கும் நடுவே கடல் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற கடல் நீர்த்தேக்கமானது தென்கொரியாவில் உள்ள சாமேஞ்சியம் சீவால் மற்றும் சிங்கப்பூரில் உள்ள மெரினா பேரேஜ் உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் பயன்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய முகத்துவாரப்பகுதிகளில் கடல் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட உள்ளன. முகத்துவார பகுதியின் வலது அல்லது இடது புறத்தில் கடலில் அணை அமைக்கப்படும்.
கடலில் கலக்கும் தண்ணீரை முகத்துவாரத்தில் அருகில் வாய்கால் அமைத்து கடலோர நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கப்படும். அதிகப்படியான தண்ணீர் வரும்போது நீர்த்தேக்கத்திற்கு போக மீதமான தண்ணீர் கடலிற்கு திருப்பி விடப்படும். இந்த நீர்த்தேக்கத்தில் நன்னீர் மட்டுமே சேரிக்கப்படும். உப்பு நீர் கலக்காத வகையில் அணைக்கு திறந்து மூடும் அளவிற்கு கதவுகள் அமைக்கப்படும். உப்பு நீருடன் நன்னீர் கலக்கும் போது நன்னீர் மேற்பரப்பிலும், உப்பு நீர் அடிப்பகுதியிலும் சேகரமாகும்.
அப்போது அணையின் உள்ள கதவுகள் மூலம் நீருக்கடியில் திறக்கப்பட்டு உப்பு நீர் வெளியேற்றப்படும். நிலத்தில் நீர்த்தேக்கம் கட்டுவதற்கு 23 மடங்கு செலவினங்கள் அதிகரிக்கக் கூடும். ஆனால் கடலில் நீர்த்தேக்கம் கட்டுவதன் மூலம் ஒரு மடங்கு செலவு மட்டுமே ஆகும். இந்த திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். அதேபோல் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் அண்டை மாநிலங்களில் தண்ணீரை வேண்டி கையேந்தும் நிலை முற்றிலுமாக மாறும். மேலும் மக்களுக்கு பயன்படும் நீர்த்தேக்கமாக உருவாகும் என்பத்தில் மாற்றுக் கருத்து இல்லை.
நன்மைகள் என்னென்ன..?
* நிலப்பரப்பில் உள்ள அணைகளிலிருந்து கடைமடை வரை நீர்வருமா என எதிர்பார்ப்பது தவிர்க்கப்படும்.
* முகத்துவாரத்தின் கடல் மற்றும் கழிமுகப்பகுதியில் அமைக்கப்படுவதால் கடல்நீர் நன்னீரில் கலப்பது தடுக்கப்படும்.
* கடல் நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள நிலத்தின் நிலத்தடி நீரும் அதிகரிக்கும்.
* கடல் உயிரினங்களுக்கு இந்த திட்டம் மூலம் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது.
* மூன்று வகைகளாக பிரிப்பு
நீர்த்தேக்கங்களின் அடிப்படையில் உள் ஆற்று முகத்துவாரங்கள், ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் மற்றும் ஆற்று முகத்துவாரத்தின் தொலைவில் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தடுப்பணையை பொறுத்தவரையில் ஊடுருவ முடியாத தடுப்பணை, மென்மையான தடுப்பணை, ஊடுருவ கூடிய திடமான மற்றும் மென்மையான தடுப்பணை எனவும் அமைக்கப்பட உள்ளது. நீரின் தரத்தை பொறுத்தவரையில் நல்ல தண்ணீர், மாசடைந்த தண்ணீர் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட தண்ணீர் என வகைப்படுத்தப்பட உள்ளது.
The post சிங்கப்பூர், தென்கொரியாவுக்கு அடுத்து தமிழ்நாட்டில் கடலோர நீர்த்தேக்கம் கட்டும் கனவு திட்டம்: சாத்திய கூறுகளை ஆராயும் நீர்வளத்துறை அதிகாரிகள் appeared first on Dinakaran.