×

பஸ் மீது டூவீலர் மோதி தொழிலாளி பலி

மல்லசமுத்திரம், பிப்.5: எலச்சிபாளையம் கிழக்குப்பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் (48), பெயிண்டர். இவர் நேற்று எலச்சிபாளையத்திற்கு பணிக்கு சென்று விட்டு, டூவீலரில் நேற்று மாலை வீடு திரும்பினார். செட்டிக்குட்டைமேடு கிழாபாளையம் பிரிவு ரோடு அருகே வந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது, டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரது சடலத்தை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.

The post பஸ் மீது டூவீலர் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Mallasamuthiram ,Periyannan ,East Pallipatti, Elachipalayam ,Elachipalayam ,Chettikuttaimedu-Kilapalayam ,Thiruchengode ,Rasipuram… ,
× RELATED மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்