×

திருச்செங்கோடு அரசு பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோடு, பிப்.5: திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, திருச்செங்கோடு நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ராயல் செந்தில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி லாவண்யா ரவி, ஈஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர், நகர திமுக அவை தலைவர் மாதேஸ்வரன், நகர செயலாளர் மேலாண்மை குழு உறுப்பினர் கலையரசி, நகர்மன்ற உறுப்பினர் சினேகா ஹரிஹரன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.

The post திருச்செங்கோடு அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Thiruchengode Government School ,Annual Function ,Thiruchengode ,Thiruchengode Government Boys Higher Secondary School ,Headmaster ,Balaji ,Thiruchengode Municipal Council ,President ,Nalini Sureshbabu ,Government ,School Annual Function ,
× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா