- , PDO
- திருவண்ணாமலை
- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை
- கலெக்டர்
- தர்பகராஜ்
- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்
- கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம்
- மணி
- தின மலர்
திருவண்ணாமலை, பிப். 5: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஊராட்சி உதவி இயக்குனர் சையத் பயாஸ் அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், பிருத்திவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்தல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடுகட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன்மன் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் (ஊரகம்), முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நடப்பு நிதி ஆண்டில் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
The post நடப்பு நிதி ஆண்டின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு பிடிஓ அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.