- விதை சான்றிதழ்
- செய்யார் தொகுதி
- செய்யாறு
- செங்காடு
- மதுரை
- கொருக்கை
- பெரம்பலம்
- பள்ளி
- நெடும்பிராய்
- துளி
- திருவண்ணாமலை மாவட்ட விதைச் சான்றளிப்பு அலுவலகம்
- மணிலா
- விதை
- தின மலர்
செய்யாறு, பிப். 5: செய்யாறு வட்டாரத்தில் செங்காடு, மதுரை, கொருக்கை, பெரும்பள்ளம், பல்லி, நெடும்பிறை, தூளி உள்ளிட்ட கிராமங்களில் நடப்பு பருவத்தில் சுமார் 120 எக்டர் பரப்பளவில் பயிர் செய்துள்ள உளுந்து, மணிலா, நெல் விதைப்பண்ணைகளை திருவண்ணாமலை மாவட்ட விதைச் சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் த.குணசேகரன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது உளுந்து பயிர்களில் அதிக அளவு சாம்பல் நோய் காணப்படுவதை சுட்டிக்காட்டி அதனை விரைந்து கட்டுப்படுத்த வேளாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது விதைச்சான்று அலுவலர் ஜெ.சுந்தரமூர்த்தி, உதவி விதை அலுவலர் த.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
The post நெல் விதைப்பண்ணைகள் விதைச்சான்று உதவி இயக்குநர் நேரில் ஆய்வு செய்யாறு வட்டாரத்தில் appeared first on Dinakaran.