- காஞ்சி காமாட்சி அம்மன்
- காஞ்சிபுரம்
- காமாட்சி அம்மன்
- நீர்ஜா விஜயகுமார்
- சென்னை
- காஞ்சி காமாக்ஷி அம்மன்...
காஞ்சிபுரம், பிப்.5: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு, 10 கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட வீணையை நேற்று கோயில் நிர்வாகிகளிடம், காணிக்கையாக வழங்கினார். சென்னையை சேர்ந்த நீரஜா விஜயகுமார் என்ற பக்தர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்காக 10 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட வீணையில் தங்க முலாம் பூசப்பட்டு அதனை காணிக்கையாக செலுத்தினார்கள். கோயில் காரியம் ந.சுந்தரேசன் மணியக்காரர் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள் ஆகியோரிடம் தங்க முலாம் பூசப்பட்ட வீணையினை வழங்கினார்கள். பின்னர் மூலவர் காமாட்சி அம்மனிடம் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயில் பிரசாதமும், அம்மனின் உருவப்படமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
The post காஞ்சி காமாட்சியம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வீணை appeared first on Dinakaran.